ஞாயிறு, பிப்ரவரி 22

வாழ்க்கை கெடக்குது ரோட்டோரமா....!

Day 55/365 : Life is Beautiful by Gooner-Licious.

வாழ்க்கை கெடக்குது ரோட்டோரமா...

இலங்கையில் இனப்படுகொலை தலை தூக்கிய போது, திலீபன் என்ற இலங்கைத் தமிழன் அதைக் கண்டித்து,உண்ணா விரதம் இருந்தே,இறந்து போனான்.அவனை சாக விட்டு வேடிக்கை பார்த்தது,சிங்கள அரசு.

நீ தூக்க வேண்டிய ஆயுதம் எது என்பதை நம் எதிரிகள் தானே தீர்மானிக்கிறார்கள்?

ஆயுதங்களோடு எழுந்தது விடுதலைப் புலிகள் இயக்கம்.நெல்லுக்குப் பக்கத்தில் முளைக்கும் புற்களைப் போலவே வேறு சில இயக்கங்களும் ஆயுதம் தாங்கி முளைத்தன.


ஒரு பக்கம் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக போர்க்களத்தில் நிற்பதாக காட்டிக் கொண்டு,இன்னொரு பக்கம் விடுதலைப் புலிகளை சிங்களனுக்குக் காட்டிக் கொடுக்கும் வேலையையும் சரியாக செய்தது. புலிகள், அந்த மாதிரி இயக்கங்களை கண்டறிந்து இன்றும் கூட அழித்தது கொண்டிருக்கிறன.


ஒரு பெண் தன் கற்பைக் காப்பாற்றிக் கொள்ள,கற்பழிக்க வந்தவனை,தற்காப்புக்காக கொலையும் செய்யலாம் தப்பில்லை என்றும்,

கொலை செய்தவனை விட, கொலை செய்ய தூண்டியவனுக்கே அதிகமான தண்டனை வழங்க வேண்டும் என்கிறது நம் இந்திய தண்டனைச் சட்டம். 6000 ஆண்களையும், 1000 இலங்கைத் தமிழ் பெண்களையும், இந்திய அமைதிப் படை என்ற பெயரில் அனுப்பி, கற்பழித்துக் கொல்ல காரணமாக இருந்த ராஜீவ் காந்திக்கு என்ன தண்டனை வழங்குவது?


ராஜீவ் காந்தி படுகொலை செய்யப் படவில்லை. அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.

அத்தனைக்கும் ஆசைப்படு என்று குமுதம்,ஆனந்த விகடனில் எழுதுகிற "சாமியர்களை(?)"ப் போல...
கணக்கில்லாமல் பொண்டாட்டிகள் வைத்துக் கொண்டகோவலன் கலைஞர், கண்ணகிக்கு சிலை வைக்கிறார். தலைவனின் வழியை தொண்டர்களும் பின்பற்றினால்...?

நாடு என்னாகும்...?


இலங்கையில் உண்மையான விடுதலை வேண்டும் என்று உயிரைக் கொடுத்து போராடுகிற அமைப்புகளை,அசிங்கப் படுத்துவதாக நினைத்துக் கொண்டு, அதற்கு போட்டியாக,போட்டி அமைப்பை ஒன்றை தானே, உருவாக்கி தன்மேல் தானே அசிங்கத்தைப் பூசிக் கொள்கிறார்,கலைஞர்.

ராஜீவ் காந்தி என்ற ஒற்றை யோக்கியனுக்காக,இலங்கையில் இருக்கிற அத்தனை தமிழனும் செத்துப் போக வேண்டும் என்று உள்மனசில் நினைத்துக் கொண்டு, வெளியில் இலங்கைத் தமிழர்களுக்காக பொய் ஒப்பாரி வைக்கிற காங்கிரஸ் கூட்டத்தைக் கூட சேர்த்து கொண்டு பொய்க் கண்ணீர் வடிக்கிறார். நம் முதலைக் கண்ணீர் முதல்வர்.
இலங்கைப் பிரச்னையைக் காட்டி என் ஆட்சியை கவிழ்க்கப் பார்க்கிறார்கள் என்று தொடை நடுங்கிப் போகிறார்,நம் கலைஞர்.
மனிதன் உண்ணுகிற உணவைத் தவிர எல்லாமே, மனிதனே ஏற்படுத்திக் கொண்ட ஆடம்பரங்கள். இந்த செயற்கை ஆடம்பர மனிதர்களால்,உணவு,உடை,இருப்பிடம் பறிக்கப்பட்ட சாலையோரவாசிகளின்...

வாழ்க்கை கெடக்குது ரோட்டோரமா...!


அவர்களுக்கு மூன்று வேளை உணவு கூட ஆடம்பரம்,அடுத்த வேளை உணவுக்குக் கூட வழியில்லாத நம் பெருமைமிகு பாரத தேசத்தில்...


எதைச் செய்தும் பணக்காரனாகி விட வேண்டும் நினைக்கிற குறுக்கு வழி,கிறுக்குப் புத்தி அம்பானிகளை என்ன செய்யலாம்?
ஒன்னும் செய்ய வேணாங்க.
கம்பி வைச்ச கதவு இருக்கிற அறையில அடைச்சு வைச்சு, மூனு வேளையும் சாப்பாட்டுக்குப் பதிலா...

பணத்தாட்கள்,நாணயங்களை கொடுத்தா போதுங்க.அதுங்களே, தானா செத்துரும்.நமக்கும் வேல மிச்சம்.


இந்த இந்திய அம்பானி பன்னிகளோடு போட்டி போடுகிற அளவிற்கு கலைஞர் அவர்களே உங்கள் குடும்பத்தின் சொத்தும் உயர்ந்திருக்கிறது... இன்னும் எதற்கு பதவிப்பித்து?

இலங்கையைப் பிரித்துக் கொடுத்தால் பிரபாகரன் சர்வாதிகாரிப் போல நடந்து கொள்வார் என்கிறார்கள்.
கல்யாணம் ஆகாமலேயே,பிறக்காத பிள்ளைக்கு என்ன பெயர் வைப்பது என்று கட்டிப் புரண்டு மண்டையை உடைத்துக் கொண்டு சண்டையிட்டார்களாம்,மடையர்கள். அவர்களின் அந்த பேச்சைப் போலத் தான் இருக்கிறது,இந்த பேச்சும்.

"இலங்கைத் தமிழர்கள் வேறு..................று........!
விடுதலைப் புலிகள் வேறு..........................று...! "

என்றும் ஒரு குரல் கேட்கிறது.


தலையை மட்டும் விட்டு விட்டு முண்டத்தை(உடலை) மட்டும் காப்பாற்றத் துடிக்கிற... முண்டங்கள்...இவர்கள்...!

விடுதலைப் புலிகளை விட்டு விட்டு இலங்கைப் பிரச்னைக்கு தீர்வு காணவேண்டும் என்று யாராவது பேசினால் அது,இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த மூடநம்பிக்கைகளில் ஒன்று என்று எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

கலைஞர் தமிழர்களின் இன துரோகி என்று வைத்துக் கொண்டால்...

புரச்ச்ச்...சீ தலைவி ஜெயலலிதா தமிழர்களின் எதிரி.ராஜபக்சேவின் அக்கா அல்லது தங்கை போலத் தான் பேசுவார்.இருவரின் உடம்பிலும் ஓடுவது ஹிட்லர் இரத்தம்,அதுங்க அப்படித்தான் பேசும்.

சென்னை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நம் கலைஞர் (சென்னையில் ஓடும் கூவம் நதி எல்லாச் சாக்கடைகளும் சங்கமிக்கும் வற்றாத ஜீவ நதி)
இந்த கூவத்தைச் பளிங்கு போல சுத்தம் செய்து,இந்த நதியில் பழங்கால தமிழறிஞர்கள் நீராடியதைப் போல,நம் பிள்ளைகள் எல்லாம் குளிப்பதை நான் காண வேண்டும் என்று தன் அடங்காத அல்ப ஆசையை வெளியிட்டார்.

உடனே,

அடுத்து பேச வந்த தாத்தாவாகிப் போன இளைஞர் அணித் தலைவர் ஸ்ஸ்..டாலின்" அப்பா உங்கள் காலத்திலேயே, அந்த ஆசை நிறைவேறும்" என்றார்.

ஆம்! நண்பர்களே அரசியல் பன்றிகளுக்கு சாக்கடையைப் பற்றித்தான் கவலை

My life.. upside down.. by ω ά ς ά β ι’.

காவிரி நீர் பிரச்னை நெருப்பாக பற்றிக் கொண்டபோது முதல்வர் கலைஞர் சொன்னார்.கர்நாடகாவில் தேர்தல் வரப் போகிறது,அதுவரை பொறுமையாக இருங்கள் என்றார். தமிழகத்திலும் ஆட்சி மாறப் போகிறது.

எந்த பலனுமில்லை.


அரசியல்வாதிகளுக்கு அடுத்த தேர்தல் பற்றித் தான் கவலை...

வாருங்கள்..!

நண்பர்களே...!
நாம் அடுத்த தலைமுறை பற்றிக் கவலைப்படுவோம்.....!


-ஆதிசிவம்,சென்னை.

இந்த பதிவின் முகவரியை மட்டும் அடைய/கருத்துச் சொல்ல...
http://beyouths.blogspot.com/2009/02/blog-post_22.html#links


எல்லா பதிவுகளையும் மின்னல் வேகத்தில், பார்வையிட்டு வெளியேற......

http://feedproxy.google.com/beyouths/bImA

ஞாயிறு, பிப்ரவரி 15

புலி பதுங்கும், ஒதுங்காது...!
விடுதலைப் புலிகளிடம் ஆயிரக்கணக்கான கொரில்லாப் போர் முறை தெரிந்த போராளிகள் இருக்கிறார்கள்.அவர்கள் தலைமறைவாக இருந்து, தாக்கி வீழ்த்துவதில் வல்லவர்கள் .

இதனால், எந்த சமயத்திலும் சிங்கள ராணுவம், அந்த முகம் தெரியாத எதிரிகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

கொரில்லா போராளிகளுக்கு, முன்னால் பெரிய பெரிய நாடுகளின் ராணுவமே மண்ணைக் கவ்விய செய்தியை தனக்குள் பதிவு செய்திருக்கிறது,வரலாறு.

தமிழர்கள் சுதந்திரமாக வாழ முடியவில்லை என்றால், சிங்களர்களும்,பத்திரமாக, சுதந்திரமாக வாழ்ந்து விட முடியாது...

என்ற உண்மையை சிங்களர்களே ஒத்துக் கொள்கிறார்கள்....

போராளிகள்

செத்துக் கொண்டிருக்கும்

மண் என்கிறார்கள்...எம் மண்ணை ....திருத்தினேன்

போராளிகள்

பிறந்து கொண்டிருக்கும் மண்_காசி ஆனந்தன்

இந்த பதிவின் முகவரியை மட்டும் அடைய/கருத்துச் சொல்ல...
http://beyouths.blogspot.com/2009/02/blog-post_15.html#links

எல்லா பதிவுகளையும் மின்னல் வேகத்தில், பார்வையிட்டு வெளியேற......
http://feedproxy.google.com/beyouths/bImA

வெள்ளி, பிப்ரவரி 13

வாழவைக்கும் காதலுக்கு ஜே!

வாழவைக்கும் காதலுக்கு ஜே!காதலை ஆதரிக்கிறவர்களைப் பற்றி நாம் இங்கே கவலைப்படப் போவதில்லை.அது நமக்கு தேவையுமில்லை.


காதலை எதிர்க்கிறவர்களைப் பற்றித் தான் இனி இங்கே பார்க்கப் போய்கிறோம்.


காதலர் தினம் நம் தமிழ்க் கலாச்சாரத்திற்கு ஏற்றது இல்லை. அது நம் இந்திய கலாச்சாரத்தை, அதாவது இந்துக் கலாச்சாரத்தை அழிக்கிறது என்றும், இன்னும் ஒருபடி மேலே போய் காதலையும் விபச்சாரச் சட்டத்தில் சேர்த்து காதலிப்பவர்களை தண்டிக்க வேண்டும் என்றும், காதலர் தினத்தன்று கட்டாயத் தாலி கட்டச் சொல்லி கலாட்டா செய்ய வேண்டும் என்று இந்தியா முழுவதும் வேறு வேறு
பெயர்களில் இயங்குகிற,இந்து மதம் சார்ந்த அமைப்புகள் கூச்சலிடுகின்றன.


பொது இடத்தில் நாகரீகம் இல்லாமல் காதலர்கள் நடந்து கொள்கிறார்கள் அதனால்தான் அதை எதிர்க்கிறோம் என்கிறார்கள். இந்த நல்ல விஷயத்தை நாமும் வரவேற்போம்.


அதற்கு முன்னால் காதல் திருமணம் எப்படி நல்லது,எப்படி கெட்டது? என்பதை கொஞ்சம் பார்த்து விடுவோம்.


ஒரு புதிய வகுப்பறைக்குள் நுழைகிற ஆணோ, பெண்ணோ,அந்த வகுப்பு முழுவதும் நிரம்பி இருப்பவர்களில் மிகச் சிலரைத் தான், தன் நண்பர்களாக தேர்ந்தெடுத்து ஏற்றுக் கொள்ள முடிகிறது.


அதில் பெரும்பாலும் ஒரே ஒரு நண்பனை மட்டும் தான் தேர்ந்தெடுத்து, நம் சுகத் துக்கங்ளை பகிர்ந்து கொள்கிறோம்.


அந்த உயிருக்கு உயிரான நட்பு, ஆணை நோக்கியும் ,பெண்ணை நோக்கியும், இடம் மாறி நகரும்போது,அது காதலாகி விடுகிறது.


 தனக்காக உருகி வழிகிற அந்த ஆண், பெண்ணின் தூய நட்புக்கு முன்னால்,அந்த காதலுக்கு முன்னால்...


போலித்தனமாக மனிதர்களை பிரித்து வைத்திருக்கும்...

சாதி,மதம்,பணம்,படிப்பு,தகுதி,வரதட்ணை,ஆண், பெண் என்கிற வித்தியாசங்களை எல்லாம் தோற்றுப் போய் ஓடிவிடுகின்றன.
காதலிக்கும் காலங்களில் தான், ஒருவரை புரிந்து கொண்டு விட்டுக் கொடுத்து, மனசளவில் முழுமனிதர்களாகிறார்கள்.

இந்த பக்குவத்தை நமக்குக் காதல் தான் கற்றுத் தருகிறது.


காதல் தான் எங்கே அழ வேண்டுமோ,அங்கே அழக் கற்றுத் தருகிறது.


எங்கே சிரிக்க வேண்டுமோ அங்கே சிரிக்கக் கற்றுத் தருகிறது.


வாழ்க்கையை முழுதாக காதலிக்கக் கற்றுத் தருகிறது.


மொத்தத்தில் வாழ்க்கையை வாழக் கற்றுத் தருகிறது...!

மதம் மாறி, சாதி மாறி திருமணம் செய்து கொள்வதை கலப்புத் திருமணம் என்று சொல்வதைக் கேட்டு நம் அறிவுத் தாத்தா பெரியார் கோபமாக் கேட்டார்.


"என்ன ஆட்டுக்கும்,மாட்டுக்கும் நடக்கிற திருமணமா?கழுதைக்கும் குதிரைக்கும் நடக்கிற திருமணமா?மனிதனுக்கும் மனிதனுக்கும் நடக்கிற,பெண்ணுக்கும் ஆணுக்கும் நடக்கிற திருமணம் எப்படி கலப்புத் திருமணமாகும்?" என்று கேட்டார்.


இனி பெற்றோர்கள் பார்த்து நிச்சயிக்கிற திருமணம் பற்றியும் கொஞ்சம் பார்த்து விடுவோம்...


சொந்தங்கள், பந்தங்கள்,உற்றார் ,உறவினர்களுக்கு பிடித்துப் போயிருந்தால், கடைசியாக பெண்ணிடம் இந்த மாப்பிள்ளைய உனக்குப் பிடிச்சிருக்கா? என்று போனால் போகிறதென்று சும்மா பெயருக்கு கேட்டு வைப்பார்கள்.


எல்லா தகுதிகளையும் பார்ப்பவர்கள்.


மாப்பிள்ளையின் குணமும்,பெண்ணின் மனசும் ஒத்துப்போகுமா?என்பதைப் பற்றி கடைசிவரைக்கும் யாரும் கவலைப்பட மாட்டார்கள்.


மாப்பிள்ளையை தனக்குப் பிடித்திருக்கிறதா,பிடிக்க வில்லையா என்ன சொல்வது தெரியாத குழப்பமான மனநிலையில் இருக்கும் போதே, பெண்ணின் கழுத்தில் தூக்குக் கயிறாக தாலி ஏறும்...


நல்லவனோ,கெட்டவனோ அவனையே கடைசிவரை கட்டி அழ வேண்டும்...


அப்படித்தான்...


என் அப்பாவைப் பெற்ற பாட்டி,தாத்தா எதிரில் வந்தால் எண்ணெய்யில் இட்ட கடுகாக வெடிப்பாள். தாத்தா சாவுக்கு ஒரு சொட்டுக் கண்ணீர் கூட விடவில்லை.


நிறையப் பிள்ளைகள்.


இரவில் மட்டும் கணவன் மனைவியாக வாழ்ந்து விட்டு, என் பாட்டியும் போய்ச் சேர்ந்து விட்டாள்...


இனி அப்படியே காதலர் தினத்தை எதிர்ப்பவர்களின் பின்னணி பற்றி கொஞ்சம் பார்ப்போம்...

1. உலகத்திலேயே உன் கடவுளை நீ தொடக் கூடாது என்கிற இந்து மதம் தான் புனிதமான மதம் என்பவர்கள்.


2.  மதத்தின் பெயரால், சோதிடத்தின் பெயரால் மனிதர்களை நரபலி கொடுக்கலாம் தப்பில்லை என்பவர்கள்.


3. பெண் ஆணுக்கு அடங்கி நடக்க வேண்டும் அதுதான் இந்திய கலச்சாரம் என்பவர்கள்.

4. பொய்யையும்,மூடத்தனத்தையும் விற்று காசாக்கி ,அதை வைத்து பிழைப்பு நடத்துபவர்கள்.


5.  இந்தியாவை மதந்தான் ஆள வேண்டும் மனிதர்கள் ஆளக்கூடாது என்பவர்கள்.


6. மனிதன் முக்கியமா, மதம் முக்கியமா என்றால் மதந்தான் முக்கியம் என்பவர்கள்.

7. காதலித்தவர்களை ஒன்று சேர்ப்பதற்காக உயிர் விட்ட வாலண்டைன் என்ற கிறிஸ்துவ சாமியார்,கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக எதிர்க்கிறார்கள்.


இரத்தம் வெளுத்த,  காவி   நிற ரத்தக் கூட்டம் இப்படித்தான் யோசித்து தொலைக்கும்....!

-ஆதிசிவம்.


இந்த பதிவின் முகவரியை மட்டும் அடைய / கருத்துச் சொல்ல...
 
எல்லா பதிவுகளையும் மின்னல் வேகத்தில், பார்வையிட்டு  .வெளியேற.....
http://feedproxy.google.com/beyouths/bImA
 
 

புதன், பிப்ரவரி 11

எவன் ஒருவன்எவன் ஒருவன்,

தன் கண்ணுக்கு முன்னாள்

நடக்கிற அநியாயத்தைத் தட்டிக் கேட்கிறானோ....

அவனே என்னை சேர்ந்தவன்.....!


_சே குவேராஇந்த பதிவின் முகவரியை மட்டும் அடைய/கருத்துச் சொல்ல...
http://beyouths.blogspot.com/2009/02/blog-post_11.html#links

எல்லா பதிவுகளையும் மின்னல் வேகத்தில் , பார்வையிட்டு மீள...
http://feedproxy.google.com/beyouths/bImA


ஞாயிறு, பிப்ரவரி 8

என் நினைவு நாள்


என் நினைவு நாள்
நான்
மீண்டும்
பிறந்தால்
அவளின்
இதயமாக
பிறக்க வேண்டும்

அவளுக்காக
துடிப்பதற்காக
அல்ல

இந்த முறையாவது
அவளுக்கு
இதயம் இருக்கட்டும் என்று...!உன்
நினைவு
இல்லாத நாள்...?


என்
நினைவு நாள்...!

(என் கைப்பேசியில் பூத்தப் பூக்கள்)

www.beyouths.co.cc

புதன், பிப்ரவரி 4

என் காதல்

என் காதல்


என்னை விட
உன்னை
பத்திரமாக
பார்த்துக்கொள்கிறது
என் காதல்


இப்படிக்கு மாணவன்

இப்படிக்கு மாணவன்


வீரத்தமிழ்மகன் கு.முத்துகுமாரின்

தியாகத்தை ஊர் ஊராகச் சொல்ல
நீண்ட விடுமுறை அளித்து உதவிய
தமிழக அரசுக்கு நன்றி!

இப்படிக்கு
தமிழக மாணவர்கள்

(குறிப்பு: இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக வகுப்புகளை புறகணித்து போராடும் தமிழக மாணவர்களை கொச்சைப் படுத்தி விடுமுறை அளித்து வீட்டுக்கு அனுப்பிய,தமிழக சிங்களத் தலைவர் கலைஞரை (ராஜபக்சே)கிண்டலடித்து ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டி, இது)

ஞாயிறு, பிப்ரவரி 1

ஓ...மனமே....!

ஓ...மனமே...!

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒர் அலைவரிசை,ஓர் அதிர்வெண் ஓடுகிறது.அதை மிருகங்கள்,தாவர இனங்கள் கூட இனம் கண்டு கொள்ளும் என்கிறது,அறிவியல்.

சில மனிதர்களைப் பார்த்தாலே,அவர்களிடம் பழகி இருக்க மாட்டோம்,பேசி இருக்க மாட்டோம்,ஆனாலும் அவர்களை நமக்குப் பிடிக்காமல் போகிறதே,ஏன்?


அவர்களின் உடல் மொழி தான்!


அவர்களிடமிருந்து வெளியேறும் எண்ண அலைகளை,நம்மை அறியாமலேயே,படிக்கிற நம் மனந்தான், அவர்களை ஏற்க மறுக்கிறது என்கிறது, மனிதனின் மனதைப் பற்றி ஆராய்கிற அறிவியல்.


சிலரை,அவர்கள் தவறே செய்தாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல்,அப்படியே ஏற்றுக் கொள்கிறது, நம் மனம்...


அந்த இருவருக்கும் இடையே ஓடுகிற ஒரே அலை வரிசை தான்,அதற்கு காரணம்!


செடி,கொடி,மரங்களை காதலிக்கிற மனிதர்கள் அருகில் வரும்போது,தாவரங்கள் கூட தங்களுக்குள் சந்தோஷ அலைகளை பரப்பி ஆனந்த நடனமாடுகிறதாம்.


அதே மனிதன் அதே தாவரங்களை,அழிக்கும் நோக்கத்தோடு நெருங்கும் போது ,அந்த மனிதனின் தீய எண்ண மன ஓட்டத்தை முன்கூட்டியே அறிந்து,தன் சக தாவர உயிரினங்களுக்கு அபாய அலைகளை அனுப்பி எச்சரிக்கை செய்கிறதாம்.


இந்த நுண்ணறிவு விலங்களுக்கும்,பறவைகளுக்கும் கூட இருக்கிறது என்று நிருபித்திருக்கிறது,அறிவியல்.


என் சின்னஞ்சிறிய வயதில் நடந்த சம்பவம் ஒன்றைச் சொல்கிறேன்...


எங்கள் வீட்டில் வளர்த்த,எங்கேயோ விளையாடிக் கொண்டிருந்த, என் சின்னஞ்சிறிய செல்ல நாய்க்குட்டி...


என் கால்களுக்கு இடையே மிதிபட்டு...


"வீல்...,வீல்...!" என்று நொண்டிக் கொண்டே கத்தியபடி ஓடிய பிறகு தான்...


தெரிந்தது


என் செல்லம் எனக்கு தெரியாமலேயே என்னை பின் தொடர்ந்த விஷயம்...


என் செல்லத்தை தூக்கி மடியில் போட்டு,நான் அழுத அழுகையைப் பார்த்து,என் செல்லம், தன் அழுகையை நிறுத்திக் கொண்டதாம்.


அதற்கு பிறகும் என் அழுகை தொடர்ந்ததாக,நாய் கூட போட்டி போட்டு அழுறான் என் மகன் என்று அம்மா எல்லோரிடமும் தன் கண்களில் கண்ணீர் பளபளக்க கிண்டல்,கேலியுமாக ,இன்றும் கூட எல்லோரிடமும் சலிக்காமல் சொல்லிச் சொல்லிச் சிரிப்பாள்.இன்றும் கூட...


"பூனை,கோழி,நாய்,பேய் எல்லாம் இவன் வந்தா,இவன் கிட்ட தான் போய் ஒட்டிக்கிதுங்க.அப்படி என்ன தான் மந்திரம் போடுறானோ தெரியல" என்பாள்,அம்மா.நேரம் கிடைக்கும் போதெல்லாம்.


அப்படி ஒன்னும் அது ஒரு பெரிய ரகசியம் எல்லாம் இல்லைங்க


எப்படி ஒவ்வொரு மனுசனும் வாழ,இந்த பூமியில எல்லா உரிமைகளும் இருக்கோ,அது மாதிரி, அந்த உயிர்களும், இந்த பூமித் தாய் பெற்ற எல்லா உயிர்களுக்கும் எல்லா உரிமைகளும் இருக்குங்கிற உண்மைய உணர்ந்தால போதுங்க


நாம சாப்பிடுற மிச்சத்தை, வெறும் எலும்புத் துண்ட மட்டும் வீசி எறியாம,நாம சாப்பிடுற சாப்பாட்டில,அப்படியே கொஞ்சம் அதுங்களுக்கும் ஒதுக்கிப் பாருங்க..


எப்படிப்பட்ட மிருகமும்...


ஒரு பிஞ்சுக் குழந்தை, எப்படி தன் தாயின் தோள்களைத் தாவிப் பற்றிக் கொள்ளுமோ...


அது போலவே...

உங்கள் மேலும் தாவிப் பற்றிக் கொள்ளும்...!


_ஆதிசிவம்

www.beyouths.co.ccதீத் தமிழன்

"தீத் தமிழன்...!"

"தற்கொலை-கோழைகள் எடுக்கும் வீரமான முடிவு "

எனக்கு கைப்பேசியில் அடிக்கடி மின்னஞ்சல் பார்க்கும் கெட்ட பழக்கம் இருக்கிறது.29-01-09 அன்று வேலைக்குப் போகும் அவசரத்திலிருந்த, நான் யாரோ ஒரு முத்துக்குமார் என்பவர் இவ்வளவு அதிகாலையில் ,காலை 7.40 மணிக்கே மின்னஞ்சல் அனுப்பி இருக்கிறாரே,அவர் நம் இமெயில் குழுவுக்கு அனுப்பிய முதல் மின்னஞ்சல் அது. அது தான் கடைசி மின்னஞ்சலும் கூட என்று எல்லாம் முடிந்த பிறகுதான்
தெரிந்தது.கலங்கிப்போனேன்..!


அவசரத்தில் அதன் அர்த்தங்களை சரியாக உள்வாங்கிக் கொள்ளாமல் அழித்த மின்னஞ்சலை மீண்டும்,மாலை தோண்டி எடுத்து மீட்டு திரும்பத் திரும்ப படித்த பிறகு தான் எனக்கே புரிந்தது.உயிர்வலியோடு தன் தற்கொலை செய்தியையும் முன்னமே பதிவு செய்து அதையே சிறு சிறு துண்டறிக்கையாக,அதே மின்னஞ்சல் செய்தியை அச்சிட்டு,நுங்கம்பாக்கத்தில் இருக்கிற மத்திய அரசு இயங்குகிற
கட்டிடங்களுக்கு முன்னால், எல்லோரிடமும் அந்த துண்டறிக்கைகளை கொடுத்து விட்டு, தன்னைத் தானே பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொண்டான்,என்று.


அவர் மின்னஞ்சலில் வந்த அந்த தற்கொலைச் செய்தீ:


என் உடலை காவல்துறை அடக்கம் செய்து விட முயலும்,விடாதீர்கள்.என் பிணத்தைக் கைப்பற்றி அதைப் புதைக்காமல் ஒரு துருப்புச்சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப் படுத்துங்கள்.எனக்கு சிகிச்சையோ போஸ்ட்மார்டமோ செய்யப் போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மானவர்களே உங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும்


அவன் எரிந்து கரிக்கட்டையாக மண்ணில் சாய்ந்த போது நேரம் காலை 10 மணிக்கு மேல் ஆயிருந்தது.


100 விழுக்காடு காயம் என்பதால்,காப்பற்ற முடியவில்லை என்கிறது மருத்துவ அறிக்கை.


"இன்னும் ஒரு மணி நேரந்தான் உயிரோடு இருப்பேன் அதற்குள் நீங்கள் என்ன கேள்வி வேண்டுமானாலும் கேட்டுக் கொள்ளுங்கள்" என்று போலீஸ்காரர்களிடம் தெளிவாக,வார்த்தை தடுமாறாமல் பேசியிருக்கிறான்.


"இவ்வளவு புத்திசாலியான நீ சாகத் துணியலாமா? "என்று கேட்டிருக்கிறது காவல்துறை.


என்னைப் போல நிறைய புத்திசாலிகள் இலங்கையில் சாகிறார்களே,அந்த சாவைத் தடுக்கத்தான் இந்த முடிவு என்று மரணம் வாக்கு மூலம் வழங்கிய பிறகு...


உயிர்பிரிந்த நேரம் மதியம் 12.30


முத்துக்குமார் தங்கியிருந்த தன் தங்கை தமிழரசியிடம், முத்துக்குமாரனின் போட்டோ கேட்டு வந்த பிறகுதான் தெரிந்ததாம் தீக்குளித்த செய்தி!


காலை அய்ந்து மணிக்கே எழுந்து வீட்டை விட்டே போய்விட்டதாக முத்துக்குமாரனின் தங்கை கதறுகிறாள்.


அவன் கைப்பேசி எண்ணும் அவன் அனுப்பிய மின்னஞ்சலில் இருந்தது.


எதையாவது பேசி அவன் சாவைத் தடுத்திருக்கலாம் என்ற குற்ற உணர்வு என்னை வாட்டுகிறது.


எப்படியாவது,எதை செய்தாவது வாழ்ந்து விட வேண்டும் என்று அர்த்தம் இல்லாமல் வாழ்கிற மனிதர்களில்,மற்றவர்களுக்காக வாழ்வது தான் அர்த்தம் உள்ள வாழ்க்கை என்று வாழ்ந்த முத்துக்குமாரனின் இழப்பு என்னை கொஞ்சம் அதிகமாவே பாதித்தது.


உயிரோடு இருந்தால், இன்னும் நிறைய ஆக்கப்பூர்வமான செயல்களை செய்திருக்கலாமே என்ற ஆதங்கம் என்னை வாட்டுகிறது.


ராஜீவ்காந்தி கொலையைக் காட்டி விடுதலைப்புலிகளை எதிர்க்கிற காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் யாரும் ராஜீவ்காந்தியோடு செத்துப் போகவில்லை ஏன்? என்ற ராஜீவ்காந்தி கொலையை பற்றி விசாரித்த விசாரணை கமிஷன் கேட்ட கேள்விக்கு அந்த காங்கிரஸ் கட்சி, இன்று வரை பதில் சொல்ல வில்லை.


இதையும் முத்துக்குமாரன் தன் இறுதி அறிக்கையில் பதிவு செய்திருக்கிறான்.


தனக்குள்ள எக்கச்சக்கமான சொத்துகள் அரசுடமையாகி விடும் என்ற கேவலமான அச்சத்தில் சுதந்திரபோராட்ட வீரரானவர் பண்டித ஜவஹர்லால் நேரு என்கிறது,சரித்திர உண்மை.


இதே காரணத்திற்காகத்தான்,தமிழ்நாட்டைச் சேர்ந்த மூப்பனரும் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார் என்கிறது ,சரித்திரம்.


இப்படிப்பட்ட அயோக்கிய ஏமாற்றுப் பரம்பரையில் பிறந்த ராஜீவ் காந்தி மட்டும் எப்படி யோக்கியமானவராக இருக்க முடியும்?.அந்த உத்தம காந்தி மீது நிரூபிக்கப்பட்ட போபர்ஸ் பீரங்கி ஊழல் குற்றச்சாட்டு, அவர் இறந்த பிறகும் கூட,இன்னும் உயிரோடு இருக்கிறது.


தற்கொலை செய்து கொள்ளாமல்,வேறு ஏதாவது வழியில் அவன் தன் எதிர்ப்பை காட்டியிருக்கலாம் என்று ஒரு கருத்து ஊர்வலமாக வருகிறது...

எதை செய்திருந்தால்,இலங்கையில் அமைதி திரும்பும் என்ற கேள்விக்கு ,இங்கே யாரிடமும் நேர்மையான பதில் இல்லை.


மாலைப் பத்திரிக்கைகளில் எந்த பத்திரிக்கைகளிலும் முத்துக்குமரனின் போட்டோவோடு செய்தி வெளியிடவில்லை.


ஆனால் நம் வலைப் பதிவர்கள்,நிறைய பேர் நிருபர்களாக இருப்பதாலே என்னவோ புகைப்படத்தை தங்களின் வலைத் தளங்களில்,பத்திரிக்கைச் செய்திகளை விட முந்தி, அந்த படங்களை தங்களின் தளங்களில்,உடனே வலையேற்றி இருந்தார்கள்,அந்த அளவிற்கு விஞ்ஞான வளர்ச்சி, வேகம்...


இது இப்படி இருக்க...


இலங்கைப் போர் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக,அடுத்த தலைமுறையிலும் தொடரும் வெட்கக் கேடும் இதே பூமி பந்தில் தொடர்ந்து கொண்டிருக்கிறது...
நமக்கு பக்கத்திலேயே...


பத்திரிக்கைகளில் ,சென்னை பதிப்பு மாலைமுரசு பத்திரிக்கை மட்டும் கொஞ்சம் கூடுதல் அக்கறையோடு முத்துக்குமாரின் செய்திகளை வெளியிட்டு இருந்தது.


விடுதலைப் புலிகளை காட்டி இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக வாய் திறப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள்,


மனிதர்கள் தான் மனிதர்களைப் பற்றி கவலைப் படுவார்கள்...


பேசத் தெரிந்த மிருகங்களே!...
நீங்கள் கொஞ்சம்
மவுனமாக இருங்கள்.


தமிழ்நாடே இந்த நெருப்புச் செய்தி கேட்டு சுடுகாட்டு அமைதியோடு இருந்த சமயத்தில்...


ஒரு கொடூரமான காமெடி விழாவும் சிறப்பாக நடந்தது.


தன் சொந்த சகோதரன் வளர்ச்சியைக் கூட பார்க்க சகிக்காமல்,தயாநிதி மாறனின் தினகரன் பத்திரிக்கை அலுவகத்தை சேர்ந்த இரண்டு பேரை ஆட்களை ஏவி கொன்ற,"ஐந்தமிழ் அறிஞர்" (சென்னையில் கலைஞர் கட்சியினரின் சுவரோட்டி வாசகம் ) கலைஞரின் மகன்,இப்படி எதற்கும் அஞ்சாத "அஞ்சா நெஞ்சன் மு.க.அழகிரி" அவர்களுக்கு(கிட்டத்தட்ட அரசு பணியாளராக இருந்தால் ஓய்வு பெறும் வயது)தன் 58 ஆவது
பிறந்தநாளை கொண்டாடிக் கொண்டிருந்தார்.


நானும்,என் அண்ணன் அழகிரியும் இரட்டைக் குழல் துப்பாக்கி என்று கலைஞரின் இன்னொரு மகன் மு.க.ஸ்டாலின் மைக் பிடித்து புளந்து காட்டியிருக்கிறார்.


யாரைக் கொல்ல..?


வாழ வேண்டிய வயதில் ஒரு இளைஞன்,இங்கே ஒரு பொது பிரச்னைக்காக கருகிக் கரிக்கட்டையாக கிடக்கிறான்.


நாட்டுக்காக உழைப்பேன் என்று நா கூசாமல் ஆட்சியைப் பிடித்த கூட்டம் நாடே இழவு வீடாகக் கிடக்கும்போது கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிக்கொண்டிருக்கிறது,.


இந்த வக்கிரப்புத்திசாலிகளின் கைப் பிடிக்குள் தான் தமிழ்நாடே இருக்கிறது...


என்னக் கொடுமைங்க ,இது... ?கண்ணீர் துளிகள்...


மருத்துவமனையில் முத்துக்குமாருக்கு சிகிச்சை கொடுத்தபடியே அவரிடமிருந்து வாக்குமூலமும் வாங்கப்பட்டது. அங்கிருந்த டியூட்டி மருத்துவர் முன்னிலையில் நுங்கம்பாக்கம் போலீஸ் உதவி கமிஷனர் முரளி யிடம் முத்துக்குமார் பேசினார். முரளி, 'அலுவலகக் குறிப்புக்காகத் தேவைப்படுகிறது... தம்பி, நீங்க என்ன சாதி?' என்று கேட்க, 'நான் தமிழ் சாதி...' என்று அழுத்திச் சொன்னாராம். கூடவே, 'எந்த சாதியும் இருக்கக் கூடாது என்றுதான் போராடிக் கிட்டு இருக்கேன். அது மட்டுமல்ல, எத்தனையோ அறப்போராட்டங்கள் இருக்க, நான் இப்படியரு முடிவைத் தேடியதற்குக் காரணம்... என்னால்தான் இலங்கைப் பிரச்னைக்கு விடிவு காலம் பிறக்கும். என்னுடைய இந்த முடிவு விடுதலைப்புலிகள் இயக்க சகோதரர் பிரபாகரனுக்குச் சென்றடைய வேண்டும். இந்திய அரசு, இலங்கைப் பிரச்னையில் குருடாக இருக் கிறது. அதற்குப் பார்வையூட்டத்தான் என்னுடைய இந்த முடிவு...'' என்று தீர்க்கமாகச் சொல்லிவிட்டு, மயக்க நிலைக்குச் சென்று மரணத்தைத் தழுவிவிட்டார் முத்துக்குமார்.
(நன்றி : ஜூனியர் விகடன்)


கவிஞர்,பாடலாசிரியருமான தாமரை,நடிகர் சத்யராஜ்,நடிகர் வடிவேல் போன்றவர்கள் உடலைக் கண்டு கதறியழுதார்கள்.

முத்துக்குமாரின் மரணம் போரில் மாண்ட விடுதலைப்புலிகளுக்குச் சமம்.
-தொல்.திருமாவளவன்.

முத்துக்குமார் என்ற இளைஞர் ஈழத்தமிழர்களுக்கு ஆக்ஸிஜன் கொடுத்து விட்டு இறந்திருக்கிறார்.
-இயக்குநர் பாரதிராஜா

விடுதலைப் புலிகள் தான்,இலங்கைத் தமிழர்கள்.இலங்கைத் தமிழர்கள் தான்,விடுதலைப் புலிகள்.இன உணர்வு தமிழர்களுக்கு இருக்கக் கூடாது என்று தடை போட யாருக்கும்,எவனுக்கும்,இங்கே உரிமையில்லை.
-இயக்குநர் ஆர்.சுந்தராஜன்.

அவன்
உடலில்
ஏற்றிக் கொண்ட
தீயை
நாம் உள்ளத்தில்
ஏற்றிக் கொள்வோம்..!
-மாலை முரசு,சென்னை பதிப்பு.

நீ இறந்தும் வாழ்கின்றாய்...
நாங்கள்
வாழ்ந்து கொண்டிருந்தாலும்...
பிணங்கள்..!


-ச.ராமானுசம்
www.nellairamanujam.blogspot.com

ஜனவரி 31-2009 அன்று ,சென்னை கொளத்தூரில் மாலை 3.30 மணிக்கு தொடங்கிய இறுதி ஊர்வலம்,ஏழே கால் மணிநேர ஊர்வலத்திற்குப் பிறகு இரவு 10.45 மணிக்கு மூலக் கொத்தளம் வந்தடைந்தது.


இறுதி ஊர்வலத்திற்கு எந்த அரசியல் கட்சியும் கொடிபிடிக்க கூடாது என்று வேண்டுகோள் விடப் பட்டிருந்தது.
எம்மை மண்ணுக்குள் புதைத்தாய்...

எம் மண்ணை
எங்கே புதைப்பாய்...?

__உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்.

www.beyouths.co.cc
வணக்கம்! என் இனிய இணைய இளைய தமிழகமே...!
Blog Widget by LinkWithin

"நகர்ந்து கொண்டிருப்பதே நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே இளைஞன்!"

இந்திய அரசே, இலங்கைத் தமிழர்களைக் கொல்லாதே....!

புதிய பூவிது...!

Grab the widget  Tech Dreams

இ மெயில் குழு முகவரியில் இருந்து வரும் தானியங்கி மின்னஞ்சல்களின் திரட்டி இது ....

அதிகம் பார்வையிட்ட பதிவுகள்

நான் இங்க இருக்கேன்....!

http://adobeperson.com/wp-content/uploads/2008/10/photoshop-chatting-logo-website-graphics24.jpg

உடனடி மொபைல் இமெயில் பதிலுக்கு...

பின்பற்றுபவர்கள்

மின்னஞ்சல் வழியே உடனடியாகச் சூடாகப் புதியப் பதிவுகளைப் பெற...

Enter your email address:

Delivered by FeedBurner

மின்னஞ்சல் வழியே உடனடியாகச் சூடாகப் புதியப் பதிவுகளைப் பெற...

Enter your email address:

Delivered by FeedBurner

என்னைப் பற்றி

உங்கள் கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்

Guestbook
"நான் எப்போதும் மழையில் நடக்க விரும்புகிறேன். அப்போதுதான் நான் அழுவதை யாரும் பார்க்க முடியாது" -சார்லி சாப்ளின்


 என் வலைத்தளத்தில்
 www.nee-naan-nilaa.blogspot.com
  
நான் எழுதிய சார்லி சாப்ளின் கதையை
இந்த முகவரியில் இணைத்திருக்கிறது..!

கீற்று இணைய தளத்திற்கு...

நன்றி!

மின்னஞ்சல் வழியே உடனடியாகச் சூடாகப் புதியப் பதிவுகளைப் பெற...

Enter your email address:

Delivered by FeedBurner

Recent Comments

முந்தய பதிவுகளைத் தேட

இந்த வலைப்பதிவில் தேடு