வெள்ளி, ஆகஸ்ட் 1

" தவத்திரு குன்றக்குடி அடிகளார் "-அவர்களின் கதை-பாகம் 7







பாகம் 7
" தவத்திரு குன்றக்குடி அடிகளார் "-அவர்களின் கதை


கயிலைக் குருமணி தரையில் வீழ்ந்து வணங்கிய அவர் எழுந்திருக்கவே இல்லை.

"குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்திற்கு விளக்கேற்றி வைக்க வேண்டும்.ஆதீனத்தைக் காப்பாற்ற வேண்டும்", என்று சொல்லிக் கொண்டே தேம்பித் தேம்பி அழுத அவர்," மகா சன்னிதானம் சரி என்று சொன்னால்தான் நான் எழுந்திருப்பேன்", என்று ஒரேடியாக பிடிவாதம் செய்தார்.

கயிலைக் குருமணியின் கால்களை விடாப்பிடியாகப் பற்றி காரியம் சாதித்த கைலாசத் தம்பிரான், கும்பகோணம் கிளை மடத்தில் பல்லாண்டு காலம் கட்டளைத் தம்பிரானாகப் பணியாற்றியவர்.

மகா சன்னிதானமாகும் வாய்ப்பு இல்லாமலே இவரைப்போல் அரும்பணியாற்றிய தம்பிரான்கள் பலர்,குன்றக்குடி ஆதீன வரலாற்றில் காணப்படுகின்றனர்.

சன்னிதானத்திற்கு தர்ம சங்கடம்.கந்தசாமி தம்பிரானை அழைத்து வரச்செய்து அவரிடம் ,"குன்றக்குடியில் இளவரசுப் பட்டம் கட்டச் சம்மதமா?," என்று கேட்டார்.

கந்தசாமியும் மறுத்தார்.அதைக் கேட்டு மகா சன்னிதானத்தின் மனமும் நெகிழ்ந்தது.

வெள்ளை-சிவப்பு நிற மலர்களால் பூக்கட்டிப் பார்ப்பது போல் கயிறு சார்த்திப் பார்ப்பதும் ஒரு வழக்கம்.அப்படி கயிறு சார்த்தி பார்த்தபோது நல்ல நிமித்தங்கள் காணப்பட்டதால்,

கந்தசாமி தம்பிரானை தருமபுர ஆதீனத்திலிருந்து குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்திற்கு மாற்றி செட்டில்மென்ட் எழுதப் பெற்றது.05-09-49 இல் தம்பிரான் குன்றக்குடிக்கு வருவார் எனத் தெரிவித்தனர்.

கந்தசாமித் தம்பிரான் குன்றக்குடிக்கு செல்வது என்று முடிவானதால்,பெற்றோர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்ய விரும்பினார்.

பூர்விக நிலங்களைப் பிரித்து,தன் பங்கைப் வாங்கி தம் பெற்றோருக்கு கொடுத்துவிடத் தம்பிரான் தீர்மானித்தார்.

இந்து சட்டப்படி,சன்னியாசியாகி விட்ட பிறகு, குடும்பச் சொத்தில் தம்பிரானுக்கு உரிமையில்லை என்று அண்ணன் கோபாலகிருஷ்ணன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.

சட்டம் திருத்த முடியாத கடைசித் தீர்ப்பா, என்ன?சட்டத்தை கண்டு அஞ்சி விடவில்லை. விடாப் பிடியாக தொடர்ந்து போராடினார்.

முடிவில் பாகப்பிரிவினை நடைபெற்றது.சொத்துக்கள் நான்கு பங்காகப் பிரிக்கப்பட்டது.

இது நாள் வரை,தன் உழைப்பின் மூலம் குடும்பத்தைக் காப்பாற்றி வந்ததற்காக, கோபாலகிருஷ்ணனுக்கு,ஒரு பங்கு கூடுதலாக இரண்டு பங்குகளும்,பாண்டுரெங்கன், நம் ரெங்கநாதன் ஆகிய இருவருக்கும் தலா ஒரு பங்கும் தரப்பட்டது.

நம் கந்தசாமி தம்பிரான் தன் பங்கை பெற்றோர் பெயருக்கு மாற்றினார்.அதை அவர்கள் இறுதிக் காலம் வரை அனுபவித்து விட்டு,தங்கள் விருப்பம் போல் யாருக்கும் தரலாம் என்று பாண்டு எழுதப்பட்டது.

அதன் பிறகு அவரின் பெற்றோர்கள் நம் அடிகளாரிடம் எந்த உதவியும் கேட்டுவரவில்லை.அவரின் பெற்றோர்களுக்குப் பிறகு அந்த பங்கு அண்ணன் கோபாலகிருஷ்ணன் குடும்பத்தாருக்கே போய் சேர்ந்தது.

பெற்றோருக்குப் பின் பெரியண்ணன் கோபாலகிருஷ்ணனும் காலமானார்.பிறகு பெரியண்ணன் குடும்பத்தினரும் அடிகளாரிடம், எந்த உதவியும் கேட்டு, கடைசி வரை வரவே இல்லை.

1949 ஆம் வருடம் செப்டம்பர் 5ந்தேதி குன்றக்குடியில் நம் தம்பிரானுக்கு அருள்திரு. தெய்வசிகாமணி அருணாசல தேசிகர் எனப் பெயர் மாற்றம் செய்து , இளம் சன்னிதானமாக முடி சூட்டினார்.

நம் அடிகளாருக்கு மடாலயத்தில் வேலை மிகவும் குறைவு.இலக்கிய நூற்களை அதிக ஆர்வத்துடன் படித்தார்.குன்றக்குடி து.ச. துரைச்சாமி குருக்களிடம் வடமொழியும் கற்றார்.

மகா சன்னிதானம் சிக்கன வாதி என்பதால் நம் அடிகளார் அடிக்கடி விழாக்கள் நடத்துவதை அவர் விரும்ப வில்லை.

சைவ,சமய விழாக்களை நடத்தினால் போதும்,திருவள்ளுவருக்கும் தமிழுக்கும் விழா நடத்தத் தேவையில்லை என்று கருதி, அத்தகைய விழாக்கள் நடத்த பணம் தர மறுத்தார்.அடிகளார் அதற்காக வருந்தவில்லை. ராம.கன்னையா,வீராச்சாமி போன்ற அவரது நண்பர்கள் பணம் திரட்டிக் கொடுத்து விழா நடத்த உதவினார்கள்.


மகா சன்னிதானத்தின் அனுமதியுடன் மு.கதிரேசன் செட்டியாருக்கும்,அதன் பிறகு ரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியாருக்கும்,தேவகோட்டை சுப.சேவு.மெ.மெய்யப்ப செட்டியாருக்கும் அடுத்தடுத்து பாராட்டு விழாக்கள் நடத்தப்பட்டன.

சன்னிதானத்தின் அனுமதியுடன் அடிகளார் வெளியூர்களுக்குச் சொற்பொழிவு நிகழ்த்தச் செல்வதும் உண்டு.

மதுரை தமிழ்ச் சங்கத்தில் தென்பாண்டி நாட்டில் தமிழ் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

திருப்பத்தூர் வழக்கறிஞர் அ.ராமச்சந்திரன் பிள்ளைக்கு நடந்த பாராட்டு விழாவில் நம் அடிகளார் பாராட்டிப் பேசினார்.

நாட்டரசன் கோட்டையில் நடைபெற்ற கம்பன் விழாவில்," புதரிடை மலர்", என்ற தலைப்பில் பேசினார்.

ராமநாதபுர சைவ சித்தாந்த மாநாட்டில் இளைஞர் விழாவுக்கு அடிகளார் தலைமை தாங்கி உரையாற்றினார்.

கூத்தனூர் கிறிஸ்தவ பங்கு தந்தை பால்ராஜ் ஏற்பாடு செய்திருந்த விழாவில் அடிகளார் தலைமை தாங்கிப் பேசினார்.

இப்படியாக அடிகளார் சின்னப் பட்டம் ஏற்ற பிறகு ஆறு மாதங்கள் அமைதியாக கழிந்தன.அதன் பிறகு சிற்சில பிரச்சனைகள் தலை தூக்கத் தொடங்கின.

ஆதீனத்துக்கு சொந்தமான கட்டடங்களின் வாடகைதாரர்களும்,நிலக் குத்தகை தாரர்களும் அடிகளாரை நேரடியாகப் பார்த்துப் பேசத் தொடங்கினார்கள்.மடாலய ஊழியர் சிலருக்கு இது பிடிக்க வில்லை.

விளைவு?

"சின்னப் பட்டமாக இருக்கும்போதே , மடாலய அதிகாரங்களை பெற முயற்சி செய்கிறார் என்றும்,மாக சன்னிதானத்தை யாரும் பார்க்க கூடாதென்றும் உத்தரவு போட்டார்," என்றும் சன்னிதானத்திடம் யாரோ சொல்லி பற்ற வைத்து விட்டார்கள்.

அதை உண்மை என்று நம்பிய சன்னிதானம், அடிகளாரை வாரிசாக நியமித்த செட்டில்மென்டை ரத்து செய்ய மதுரையில் இருக்கும் வழக்கறிஞர் சீனிவாச அய்யங்காரை சந்தித்துப் பேசினார்.அவர் அந்த யோசனையை கை விடுமாறு எடுத்துக் கூறினார்.

மதுரையிலிருந்து திருப்பத்தூர் வந்த சன்னிதானம் வழக்கறிஞர் அ.ராமச்சந்திரன் பிள்ளையிடம் யோசனை கேட்டார். அவரும் செட்டில்மென்டை ரத்து செய்ய வேண்டாம் என்ற ஆலோசனையைதான் கூறினார்.



...சுவாமிகளின் பாதச் சுவடுகள் தொடரும்....



_ஆதிசிவம்,சென்னை.








உங்களோடு இந்த பதிவை பார்வையிட்டவர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வணக்கம்!

"நகர்ந்து கொண்டிருப்பதே நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே இளைஞன்!


பதிவுக்கான மறுமொழிப் பெட்டி

நன்றி..!

♥ ஆதிசிவம்@சென்னை ♥

www.beyouths.blogspot.com

வணக்கம்! என் இனிய இணைய இளைய தமிழகமே...!
Blog Widget by LinkWithin

"நகர்ந்து கொண்டிருப்பதே நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே இளைஞன்!"

இந்திய அரசே, இலங்கைத் தமிழர்களைக் கொல்லாதே....!

புதிய பூவிது...!

Grab the widget  Tech Dreams

இ மெயில் குழு முகவரியில் இருந்து வரும் தானியங்கி மின்னஞ்சல்களின் திரட்டி இது ....

அதிகம் பார்வையிட்ட பதிவுகள்

நான் இங்க இருக்கேன்....!

http://adobeperson.com/wp-content/uploads/2008/10/photoshop-chatting-logo-website-graphics24.jpg

உடனடி மொபைல் இமெயில் பதிலுக்கு...

பின்பற்றுபவர்கள்

மின்னஞ்சல் வழியே உடனடியாகச் சூடாகப் புதியப் பதிவுகளைப் பெற...

Enter your email address:

Delivered by FeedBurner

Clicky Web Analytics

மின்னஞ்சல் வழியே உடனடியாகச் சூடாகப் புதியப் பதிவுகளைப் பெற...

Enter your email address:

Delivered by FeedBurner




என்னைப் பற்றி


உங்கள் கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்

Guestbook
"நான் எப்போதும் மழையில் நடக்க விரும்புகிறேன். அப்போதுதான் நான் அழுவதை யாரும் பார்க்க முடியாது" -சார்லி சாப்ளின்


 என் வலைத்தளத்தில்
 www.nee-naan-nilaa.blogspot.com
  
நான் எழுதிய சார்லி சாப்ளின் கதையை
இந்த முகவரியில் இணைத்திருக்கிறது..!

கீற்று இணைய தளத்திற்கு...

நன்றி!

மின்னஞ்சல் வழியே உடனடியாகச் சூடாகப் புதியப் பதிவுகளைப் பெற...

Enter your email address:

Delivered by FeedBurner

Recent Comments


இந்த வலைப்பதிவில் தேடு